TABCEDCO லோகோ
தொலைபேசி எண்கள்:
044-28190122
044-28190145
மின்னஞ்சல் முகவரி:
tabcedco@tn.gov.in
tabcedco@gmail.com
TABCEDCO FAQ

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தகுதி, ஒருமுறைப் பதிவு, கடன் திட்டங்கள், ஆவணங்கள், விண்ணப்ப நடைமுறை மற்றும் பயனாளர் சேவைகள் தொடர்பான தெளிவான பதில்களை அறியுங்கள்.

பதில்

BC, MBC மற்றும் DNC சமூகங்களைச் சேர்ந்த, நிர்ணயிக்கப்பட்ட வயது, வருமானம் மற்றும் பிற தகுதி நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதில்

18 முதல் 60 வயது வரையிலான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதில்

குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.5,00,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பதில்

முடியாது. தற்போதைய தகுதி நிபந்தனைகளின்படி, ஒரு குடும்பத்திற்கு ஒரு கடன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

பதில்

இல்லை. தகுதியுள்ள ஒரு பயனாளி, ஒரே நேரத்தில் ஏதேனும் ஒரு திட்டத்தின் கீழ் மட்டுமே கடன் பெற முடியும்.

பதில்

ILS திட்டமானது தகுதியுள்ள BC/MBC/DNC பயனாளிகளுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. GLS திட்டத்தில், சுயஉதவிக் குழு உறுப்பினர்களில் குறைந்தது 60% பேர் BC/MBC/DNC சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கும் பட்சத்தில், பிற தகுதியுள்ள சமூகங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம்.

பதில்

இல்லை. ’ஒருமுறைப் பதிவு' (OTR) என்பது ஒரு நிரந்தரப் பயனாளி சுயவிவரம் மற்றும் பயனாளியின் அடையாள எண்ணை (Beneficiary ID) உருவாக்குவதாகும். விவரங்களை பதிவு செய்த பிறகு, பயனாளி உள்நுழைந்து தகுதியான திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

பதில்

விண்ணப்பதாரரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு SMS மூலம் OTP அனுப்பப்படுகிறது.

பதில்

வெற்றிகரமான ஒருமுறைப் பதிவுக்குப் (OTR) பிறகு பயனாளருக்கு உருவாக்கப்படும் தனித்துவமான அடையாள எண் இதுவாகும். எதிர்காலத்தில் உள்நுழைவதற்கும், கடன் விண்ணப்பங்களுக்கும், அதன் நிலையை அறிந்துகொள்வதற்கும் இது பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.

பதில்

இந்த இணையதளம், ஏற்கனவே பதிவுசெய்த விண்ணப்பதாரர், தனது கடவுச்சொல்லுடன் கைபேசி எண், மின்னஞ்சல் முகவரி அல்லது பயனாளர் அடையாள எண்ணைப் பயனர்பெயராகப் பயன்படுத்த அனுமதிக்கிறது.

பதில்

பயனாளர் உள்நுழைவுப் பக்கத்தில் உள்ள ”கடவுச்சொல்லை மறந்துவிட்டால் இங்கு கிளிக் செய்யவும்” என்ற வசதியைப் பயன்படுத்தி, பரிந்துரைக்கப்பட்ட சரிபார்ப்பு மீட்டமைப்பு நடைமுறையை நிறைவு செய்யவும்.

பதில்

கோப்பானது இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வடிவம் மற்றும் அளவுக்கான கட்டுப்பாடுகளுக்குள் இணங்கி உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். தெளிவான ஸ்கேன் செய்யப்பட்ட நகலைப் பயன்படுத்தவும், மிகப் பெரிய கோப்புகளைத் தவிர்க்கவும்; மேலும் நிலையான இணைய இணைப்பைப் பயன்படுத்தி மீண்டும் முயற்சிக்கவும்.

பதில்

கூட்டுறவு வங்கிகள் மற்றும் அது சார்ந்த முகமைகள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது துணை நிறுவனங்கள் மூலமாகவே TABCEDCO செயல்படுகிறது. நிதி அனுமதி மற்றும் விடுவிப்பு ஆகியவை அந்தந்த நிறுவனங்களின் நடைமுறைகளின்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

பதில்

பயனாளிகள் இறுதிச் சமர்ப்பிப்பிற்கு முன் அனைத்து விவரங்களையும் கவனமாக சரிபார்க்க வேண்டும். சமர்ப்பித்த பிறகு ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் மற்றும் இணையதளம் திருத்தத்தை அனுமதிக்கவில்லை என்றால், மற்றொரு விண்ணப்பத்தை உருவாக்குவதற்குப் பதிலாக, சம்பந்தப்பட்ட பரிசீலனை அதிகாரியைத் (கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்) தொடர்பு கொள்ளவும்.

பதில்

குழு உருவாக்கப்பட்ட தேதியிலிருந்து குறைந்தது ஆறு மாதங்களாவது செயல்பாட்டில் இருந்திருக்க வேண்டும்.

பதில்

தனிநபர் கடன் திட்டம் (ILS), குழு கடன் திட்டம் (GLS) மற்றும் கறவை மாடு கடன் திட்டம் ஆகியவற்றின் கீழ் இணையவழியாக விண்ணப்பிக்கலாம்.

பதில்

தற்போது, தனிநபர் கடன் திட்டத்திற்கான (ILS) அதிகபட்ச கடன் தொகை ரூ.25 இலட்சம் ஆகும்.

பதில்

தற்போது, ஒரு சுய உதவிக்குழு (SHG) உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.1.25 இலட்சம் வரை மற்றும் ஒரு சுய உதவிக்குழுவிற்கு (SHG) அதிகபட்சம் மொத்தம் ரூ.25 இலட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

பதில்

தற்போது, இரண்டு கறவை மாடுகளுக்கு அதிகபட்ச கடன் தொகை ரூ.1.20 இலட்சம் ஆகும்.

பதில்

இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

பதில்

கட்டணமில்லா எண்: 1800-599-4999. சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர், கூட்டுறவு வங்கி அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் இ-சேவை மையம் ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம்.

பதில்

Google Chrome, Mozilla Firefox அல்லது Microsoft Edge போன்ற இணைய உலாவிகளின் சமீபத்திய பதிப்புகளைப் பயன்படுத்தி https://tabcedco.tn.gov.in இணையதளத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

பதில்

மேம்பட்ட ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் (iOS) இயங்குதளத்தைக் கொண்ட அலைபேசி வாயிலாக https://tabcedco.tn.gov.in இணையதளத்தை அணுகி விண்ணப்பிக்கலாம்.

பதில்

ஆம். ரூ.1 இலட்சத்திற்கு மேல் தனிநபர் கடனுக்கு (ILS) விண்ணப்பிக்க, தொழில் தொடர்பான திட்ட அறிக்கையைச் (Project Report) சமர்ப்பிக்க வேண்டும்.

பொருந்தும் கேள்விகள் எதுவும் கிடைக்கவில்லை

மேலும் உதவி தேவையா?

தொலைபேசி எண்: 044-28190122 | 044-28190145

மின்னஞ்சல்: tabcedco@tn.gov.in | tabcedco@gmail.com